/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சீத்தாராம் யெச்சூரிக்கு இரங்கல் கூட்டம்
/
சீத்தாராம் யெச்சூரிக்கு இரங்கல் கூட்டம்
ADDED : செப் 15, 2024 06:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காட்டுமன்னார்கோவில்: காட்டுமன்னார்கோவிலில், மா.கம்யூ., கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரிக்கு இரங்கல் கூட்டம் நடந்தது.
காட்டுமன்னார்கோவில் பஸ் நிலையம் எதிரில் நடந்த கூட்டத்திற்க மூத்த தலைவர் மகாலிங்கம் தலைமை தாங்கினார். மாவட்ட குழு உறுப்பினர் பிரகாஷ், வட்டச் செயலாளர் தேன்மொழி, தி.மு.க., ஒன்றிய செயலாளர் முத்துசாமி, பேரூராட்சி தலைவர் கணேசமூர்த்தி, வி.சி., தெற்கு மாவட்ட செயலாளர் மணவாளன், மகளிர் அணி செயலாளர் ராஜலட்சுமி, த.வா.க., நகர செயலாளர் ஜோதிவேல், காவிரி டெல்டா பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் இளங்கீரன் மற்றும் பலர் பங்கேற்றனர்.