/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
விருத்தாசலம் அருகே மின்னல் தாக்கி பசு மாடு பலி
/
விருத்தாசலம் அருகே மின்னல் தாக்கி பசு மாடு பலி
ADDED : மே 11, 2024 05:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே மின்னல் தாக்கி மேய்ச்சலில் இருந்த பசு மாடு இறந்தது.
விருத்தாசலம் அடுத்த குப்பநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் பாக்யராஜ் மனைவி சபிதா. இவருக்கு சொந்தமான பசு மாடு நேற்று மதியம் 2:30 மணியளவில், அங்குள்ள வயலில் மேய்ந்து கொண்டிருந்தது.
அப்போது, திடீரென பலத்த மின்னலுடன் லேசான மழை பெய்தது. வயலில் மேய்ந்து கொண்டிருந்த பசு மாடு மீது மின்னல் தாக்கி பரிதாபமாக இறந்தது.
விருத்தாசலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.