/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
நீர்தேக்க தொட்டியில் விரிசல் தண்ணீர் வீணாகும் அவலம்
/
நீர்தேக்க தொட்டியில் விரிசல் தண்ணீர் வீணாகும் அவலம்
நீர்தேக்க தொட்டியில் விரிசல் தண்ணீர் வீணாகும் அவலம்
நீர்தேக்க தொட்டியில் விரிசல் தண்ணீர் வீணாகும் அவலம்
ADDED : ஆக 18, 2024 11:46 PM

கடலுார்: கடலுார் அருகே மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் விரிசல் ஏற்பட்டு தண்ணீர் வீணாகி வருவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கடலுார் அடுத்த கோண்டூர் கண்ணையா நகரில் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் 30,000 லிட்டர் கொள்ளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டி கட்டப்பட்டுள்ளது. இந்த தொட்டியில் இருந்து அப்பகுதி மக்களுக்கு தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மேலும், இந்த நீர்தேக்க தொட்டியின் கீழ்புறம் தார் சாலை அமைத்து வாகன போக்குவரத்து நடந்து வருகிறது. இந்நிலையில், ஊரக கட்டடங்கள் பராமரிப்பு மற்றும் மேம்பாட்டு திட்டம் 2014-15ன் கீழ் மேல்நிலை நீர்தேக்க தொட்டி பழுது நீக்கம் செய்யப்பட்டது. ஆனால், தற்போது இந்த நீர்தேக்க தொட்டி சேதமடைந்து விரிசல் ஏற்பட்டு தண்ணீர் வீணாகி வருகிறது. இது அப்பகுதி மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, சேதமடைந்துள்ள நீர்தேக்க தொட்டியை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

