/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பயன்பாட்டிற்கு வராத சுகாதார நிலையம்
/
பயன்பாட்டிற்கு வராத சுகாதார நிலையம்
ADDED : ஆக 21, 2024 07:48 AM

பெண்ணாடம் அடுத்த கொசப்பள்ளம் ஊராட்சியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இங்கு கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் துணை சுகாதார நிலையம் அமைக்கப்பட்டு, சுற்றியுள்ள பெரிய கொசப்பள்ளம், இருளம்பட்டு, மாளிகைக்கோட்டம், துறையூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்தவர்கள் தினமும் சிகிச்சை பெற்று வந்தனர். நாளடைவில் பராமரிப்பின்றி சுகாதார நிலையம் மூடப்பட்டது. கட்டடங்கள் சேதமடைந்தது.
இதனால் இப்பகுதி மக்கள் இங்கிருந்து, 10 கி.மீ., துாரமுள்ள கணபதிகுறிச்சி மற்றும் பெண்ணாடம் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சிகிச்சைக்காக செல்ல வேண்டிய அவலம் ஏற்பட்டதால் பெண்கள், முதியோர் மிகுந்த சிரமம் அடைந்தனர்.
அதைத்தொடர்ந்து, கடந்தாண்டு 3 லட்சம் ரூபாய் நிதியில் துணை சுகாதார நிலையம் கட்டும் பணிகள் துவங்கி, 5 மாதங்களுக்கு முன் மின் இணைப்பு தவிர மற்ற பணிகள் நிறைவடைந்தது. 2 மாதங்களுக்கு முன் நல்லுார் ஒன்றிய அதிகாரிகளும் துணை சுகாதார நிலையத்தை கிராம மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தனர். ஆனால் செவிலியர்கள் யாரும் வராமல் துணை சுகாதார நிலையம் பூட்டியே கிடக்கிறது. சமூக விரோதிகள் துணை சுகாதார நிலையத்தில் உள்ள சுவிட்ச் பாக்சை உடைத்து சேதப்படுத்தி வருகின்றனர்.
எனவே, மாவட்ட நிர்வாகம், சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து துணை சுகாதார நிலையத்தை பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்.