/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
விருத்தாசலம் அருகே பட்டப்பகலில் வீடு புகுந்து நகை கொள்ளை
/
விருத்தாசலம் அருகே பட்டப்பகலில் வீடு புகுந்து நகை கொள்ளை
விருத்தாசலம் அருகே பட்டப்பகலில் வீடு புகுந்து நகை கொள்ளை
விருத்தாசலம் அருகே பட்டப்பகலில் வீடு புகுந்து நகை கொள்ளை
ADDED : மே 29, 2024 05:10 AM
விருத்தாசலம்; விருத்தாசலம் அடுத்த பொன்னாலகரம் கிராமத்தை சேர்ந்தவர் வேல்முருகன்; கொத்தனார். இவரது மனைவி சுதா. இவர்களின் பிள்ளைகள் வெற்றிமாறன்,14; சுபாஷினி,13.
நேற்று காலை வேல்முருகன், சுதா இருவரும் வேலைக்கு சென்றதும், சிறுவர்கள் இருவரும் தெருவில் விளையாடிக் கொண்டிருந்தனர்.
பகல் 12:00 மணியளவில், பல்சர் பைக்கில் ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம நபர், சிறுவர்களிடம் 'உங்கள் அப்பாவுக்கு பணம் தர வேண்டும். வீட்டு பீரோவில் பில் இருப்பதாக கூறினார்' என இருவரையும் வீட்டிற்குள் அழைத்து சென்றார். பீரோ மீதிருந்த சாவியை எடுத்து பீரோவை திறந்து தேடிவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
சற்று நேரத்தில் வீட்டிற்கு வந்த சுதா, குழந்தைகள் கூறியதை கேட்டு அதிர்ச்சியடைந்து, பீரோவை திறந்து பார்த்தபோது, ஐந்தரை சவரன் நகைகள் கொள்ளை போனது தெரிய வந்தது.
தகவலறிந்த ஊ.மங்கலம் போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரித்தனர். அதில், மர்ம நபருடன் மஞ்சள் புடவை அணிந்த பெண் ஒருவர் பின்னால் அமர்ந்து சென்றதாகவும், அந்த பெண் காலையில் வீடு, வீடாக சென்று யாசகம் கேட்டு சென்றது தெரிய வந்தது.
அந்த பெண்ணே, வேல்முருகன் வீட்டை நோட்டமிட்டு, நகை திருட்டில் ஈடுபட்டிருக்கலாம் என தெரியவந்தது. அதன்பேரில் போலீசார், அப்பகுதி சி.சி.டி.வி., பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர்.