/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
72 வயது கணவர் மீது வெந்நீர் ஊற்றிய பாசக்கார மனைவி
/
72 வயது கணவர் மீது வெந்நீர் ஊற்றிய பாசக்கார மனைவி
ADDED : செப் 01, 2024 04:05 AM
திட்டக்குடி : திட்டக்குடி அருகே சொத்தை தனது பெயருக்கு மாற்றித் தராததால், 72 வயது கணவன் மீது வெந்நீரை ஊற்றிய 65 வயது மனைவி மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
கடலுார் மாவட்டம், திட்டக்குடி அடுத்த ஆவினங்குடி மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ராசு,72. இவரது முதல் மனைவி இறந்து விட்டார், இரண்டாவது மனைவி பிரிந்து சென்றுவிட்டார். மூன்றாவதாக மல்லிகா,65, என்பவரை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருகிறார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.
ராசுவின் பெயரில் உள்ள சொத்தை, மல்லிகா தனது பெயருக்கு மாற்றித்தரும்படி அவ்வப்போது தொந்தரவு செய்து வந்தார். கடந்த 28ம் தேதி சொத்து தொடர்பாக இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. அன்று இரவு துாங்கிக்கொண்டிருந்த ராசு மீது, வெந்நீரை மல்லிகா ஊற்றினார். இதில் ராசு உடல் முழுவதும் காயம் ஏற்பட்டது. சிகிச்சைக்காக அரியலுார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து ஆவினங்குடி போலீசார் மல்லிகா மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.