/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தென்னை மரம் விழுந்து ஸ்கூட்டரில் சென்றவர் சாவு
/
தென்னை மரம் விழுந்து ஸ்கூட்டரில் சென்றவர் சாவு
ADDED : மே 09, 2024 04:21 AM

கிள்ளை: கிள்ளை அருகே மழையின் போது சாலையோர தென்னை மரம் விழுந்ததில், ஸ்கூட்டரில் சென்ற விவசாயி உயிரிழந்தார்.
கடலுார் மாவட்டம், கிள்ளை அடுத்த பின்னத்துார் கிழக்கு பகுதியை சேர்ந்தவர் உதயகுமார், 52; விவசாயி. இவர் நேற்று காலை 9.00 மணியளவில், தனது ஸ்கூட்டரில் பின்னத்துார் பஸ் நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்தார்.
அப்போது, காற்றுடன் மழை பெய்தது. சாலையோரம் இருந்த தென்னை மரம் திடீரென சாய்ந்து, உதயகுமார் மீது விழுந்தது. இந்த விபத்தில் படுகாயமடைந்த உதயகுமாரை, அங்கிருந்தவர்கள் மீ்ட்டு சிதம்பரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், உதயகுமார் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து, கிள்ளை சப் இன்ஸ்பெக்டர் சங்கர் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகிறார்.