/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
புவனகிரியில் வீடு புகுந்து நகை பணம் திருடியவர் கைது
/
புவனகிரியில் வீடு புகுந்து நகை பணம் திருடியவர் கைது
புவனகிரியில் வீடு புகுந்து நகை பணம் திருடியவர் கைது
புவனகிரியில் வீடு புகுந்து நகை பணம் திருடியவர் கைது
ADDED : ஜூலை 28, 2024 06:42 AM

புவனகிரி : புவனகிரி அருகே பு.மணவெளியை சேர்ந்தவர் பூபதி, 70; இவரது வீட்டில் ஓட்டை பிரித்து கடந்த 23ம் தேதி இரவு மர்ம நபர்கள் வீட்டிற்குள் புகுந்து 20 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.15ஆயிரம் பணத்தை திருடி சென்றனர். 24ம் தேதி கவரப்பாளையம் தெருவில் அச்சக உரிமையாளர் தியாகராஜன் வீட்டின் பூட்டை உடைத்து, 5 சவரன் தங்க நகை, திருடு போனது.
இது குறித்து தனித்தனி புகாரின் பேரில் புவனகிரி போலீசார் வழக்குப் பதிந்து மர்ம நபர்களை தேடி வந்தனர்.
இந்நிலையில் பூபதி வீட்டில் வேலை செய்து வந்த அவர்களது உறவினரான புவனகிரி கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த கோபு, 39; என்பவர் மீது போலீசுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
சென்னையில் மகனுடன் தங்கியிருந்த கோபுவை பிடித்து விசாரித்ததில், பூபதி வீட்டில் திருடியதை ஒப்புக்கொண்டார். அதையடுத்து, புவனகிரி போலீசார், கோபுவை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.