ADDED : மே 05, 2024 12:56 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிதம்பரம்:சிதம்பரம் நடராஜர் கோயில் அசுவ பூஜைக்காக பக்தர் சார்பில் புதிய குதிரை வழங்கப்பட்டது.
சிதம்பரம் நடராஜர் கோயிலில் அசுவ பூஜைக்காக ஏற்கனவே ராஜா என்ற குதிரை இருந்தது. கடந்த மாதம் 21ம் தேதி அக்குதிரை உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்தது.
அதனைத் தொடர்ந்து சென்னையை சேர்ந்த பக்தர் செல்வராஜி என்பவர் சிதம்பரம் நடராஜர் கோயில் அசுவ பூஜைக்காக குதிரை வழங்கியுள்ளார்.