/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சிறுமிக்கு தொல்லை: முதியவருக்கு வலை
/
சிறுமிக்கு தொல்லை: முதியவருக்கு வலை
ADDED : ஜூலை 06, 2024 04:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்: விருத்தாசலத்தில் சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட முதியவர் மீது, போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிந்து, தலைமறைவாக உள்ள முதியவரை தேடி வருகின்றனர்.
விருத்தாசலம் காந்திநகரைச் சேர்ந்தவர் ஜெகத்ரட்சகன், 62. இவர் விருத்தாசலம் பகுதியைச் சேர்ந்த 9ம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.
இதுகுறித்து, சிறுமியின் பெற்றோர்கள் கொடுத்த புகாரின் பேரில், விருத்தாசலம் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ், ஜெகத்ரட்சகன் மீது வழக்குப்பதிந்து, அவரை தேடி வருகின்றனர்.