/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சுப்ரீம் கோர்ட் நிலுவை வழக்குகளுக்கு தீர்வு காண மக்கள் நீதிமன்றம் ஏற்பாடு
/
சுப்ரீம் கோர்ட் நிலுவை வழக்குகளுக்கு தீர்வு காண மக்கள் நீதிமன்றம் ஏற்பாடு
சுப்ரீம் கோர்ட் நிலுவை வழக்குகளுக்கு தீர்வு காண மக்கள் நீதிமன்றம் ஏற்பாடு
சுப்ரீம் கோர்ட் நிலுவை வழக்குகளுக்கு தீர்வு காண மக்கள் நீதிமன்றம் ஏற்பாடு
ADDED : ஜூன் 25, 2024 07:07 AM
கடலுார், : சுப்ரீம் கோர்ட்டில் நடக்கும் சிறப்பு நீதிமன்றத்தில், வழக்கு நிலுவையில் இருப்பின் மாவட்ட மக்கள் பேசி தீர்வு காணலாம் என சட்டப் பணிகள் ஆணைக்குழு கூறியுள்ளது.
இதுகுறித்து மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு தலைவர் ஜவஹர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ள வழக்குகளை சமரசமாக பேசி முடிக்க சுப்ரீம் கோர்ட் வரும் 29ம் தேதி முதல், 3ம் தேதி வரை சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது.
எனவே, கடலுார் மாவட்ட மக்கள் தங்களுக்கு ஏதேனும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நிலுவையில் இருந்தால் சமரசமாக பேசி தீர்வு காணலாம். தீர்வு காணப்படும் வழக்குகளுக்கு நீதிமன்ற கட்டணம் முழுதும் திரும்பப் பெறும் வசதியுடன் வழக்குகளை விரைந்து முடித்து தீர்வு காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் உள்ள வழக்காடிகள் தங்களின் வக்கீல்கள் மூலமாக சிறப்பு மக்கள் சிறப்பு நீதிமன்றத்தில் நேரடியாகவோ, காணொளி வாயிலாகவோ கலந்து கொண்டு தீர்வு காணலாம்.
மேலும், விவரங்களுக்கு அந்தந்த தாலுகா நீதிமன்றங்களில் இயங்கும் சட்டப் பணிகள் குழுவை அணுகலாம். கடலுார் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு அலுவலகத்தை 04142-212660 என்ற தொலைபேசி எண் வாயிலாகவும், dlsacuddalore@gmail.com என்ற மின்னஞ்சல் வாயிலாகவும் தெரிந்து கொள்ளலாம்.
தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக் குழுவை 04425342441 என்ற தொலைபேசி எண்ணிலும், tnslsaspllokadalat@ gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தெரிந்து கொள்ளலாம்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.