/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பெட்ரோல் பாட்டிலுடன் நின்றவரால் பரபரப்பு
/
பெட்ரோல் பாட்டிலுடன் நின்றவரால் பரபரப்பு
ADDED : மே 02, 2024 11:24 PM
கடலுார்: கடலுார் முதுநகர் காவல் நிலையம் அருகில் பெட்ரோல் பாட்டிலுடன் நின்றவரை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.
மே 1ம் தேதியான நேற்று முன்தினம் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. அன்றைய தினம் திருட்டுத் தனமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்படுகிறதா என, கடலுார் முதுநகர் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். முதுநகர், வசந்தராயன்பாளையம் சாலையில் மதுபாட்டில்கள் விற்பனை செய்த அதே பகுதியைச் சேர்ந்த சுகந்தி,55; தேவநாதன், 60; ஆகியோரை போலீசார் கைது செய்து, 60 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
இந்நிலையில், சுகந்தியின் கணவர் புகழேந்தி முதுநகர் காவல் நிலையம் அருகே கையில் பாட்டிலுடன் நின்று கொண்டிருந்தார்.
அப்போது, அங்கு வந்த இன்ஸ்பெக்டர் ரேவதி, புகழேந்தியை சந்தேகத்தின் பேரில் சோதனை செய்த போது, பாட்டிலில் பெட்ரோல் இருப்பது தெரிந்தது. உடன், பெட்ரோல் பாட்டிலை இன்ஸ்பெக்டர் ரேவதி பறிமுதல் செய்து, புககேழந்தியை எச்சரித்து அனுப்பினார்.