/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
என்.எல்.சி.,யில் பணிநிரந்தரம் சேர்மனிடம் பா.ம.க., மனு
/
என்.எல்.சி.,யில் பணிநிரந்தரம் சேர்மனிடம் பா.ம.க., மனு
என்.எல்.சி.,யில் பணிநிரந்தரம் சேர்மனிடம் பா.ம.க., மனு
என்.எல்.சி.,யில் பணிநிரந்தரம் சேர்மனிடம் பா.ம.க., மனு
ADDED : செப் 06, 2024 12:32 AM

கடலுார் : பாட்டாளி தொழிற்சங்க பேரவை சார்பில், என்.எல்.சி.,யில் ஒப்பந்த தொழிலாளர்கள் பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைள் வலியுறுத்தி, மனு அளிக்கப்பட்டது.
பா.ம.க., சொத்து பாதுகாப்பு குழு தலைவர் கோவிந்தசாமி தலைமையில் பா.ம.க., வடக்கு மாவட்ட செயலாளர் ஜெகன், பேரவை மாநில பொதுச் செயலாளர் முத்துக்குமார், பொருளாளர் சேகர், என்.எல்.சி., பாட்டாளி தொழிற்சங்க நிர்வாகிகள், என்.எல்.சி., சேர்மன் பிரசன்னகுமார் மொட்டுப்பள்ளி, மனிதவளதுறை இயக்குனர் சமீர் ஸ்வரூப் ஆகியோரை சந்தித்து மனு அளித்தனர்.
அதில், என்.எல்.சி.,யில் ஒப்பந்த தொழிலாளர்களாக 15 ஆண்டு பணிபுரிந்து, பின்னர் சொசைட்டி தொழிலாளர்களாக 10 ஆண்டுகள் பணி முடித்த பிறகே பணி நிரந்தரம் செய்கின்ற நிலை இருந்து வருகிறது. இதை மாற்றி சொசைட்டி தொழிலாளர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
ஒப்பந்த தொழிலாளர்களை இன்கோசர்வ் சொசைட்டிக்கு பணி மாற்றம் செய்ய வேண்டும். ஒப்பந்த, இன்கோசர்வ் மற்றும் ஹவுசிகாஸ் தொழிலாளர்கள் அனைவருக்கும் நிரந்தர வேலை கிடைக்கும் வரை 50 ஆயிரம் ரூபாய் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சீனியாரிட்டி பட்டியலில் உள்ளவர்களில் நிலம், வீடு கொடுத்தவர்களுக்கு நிரந்தர படுத்துவதில் முன்னுரிமை வழங்க வேண்டும் என, கேட்டுக்கொண்டுள்ளனர்.