/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மாமூல் வாங்கும் இடமாக மாறிய போலீஸ் குடியிருப்பு
/
மாமூல் வாங்கும் இடமாக மாறிய போலீஸ் குடியிருப்பு
ADDED : மே 01, 2024 07:19 AM
மாவட்டத்தில், விருதைக்கு அருகாமையில் உள்ள போலீஸ் நிலையத்தின் பக்கத்தில் போலீஸ் குடியிருப்பு உள்ளது. அதில், ஒரு குடியிருப்பில் தனியாக வசிக்கும் கான்ஸ்டபிள் முதல் எஸ்.எஸ்.ஐ., ஆகியோர் தங்கி வேலை பார்க்கின்றனர்.
அந்த குடியிருப்பில் தங்கும் போலீசார்கள் தங்கள் விசாரிக்கும் மனுதாரர்களின் புரோக்கர்களை அங்கு வரவழைத்து பேசி ஒரு தொகையை கறந்து வருகின்றனர்.
இதேபோன்று, மணல் திருட்டு கும்பல், கள்ளத்தனமாக மது பாட்டில் விற்பவர்கள் உள்ளிட்ட சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோர்களை அழைத்து மாமூல் வாங்கும் இடமாக போலீஸ் குடியிருப்பை மாற்றி வருவதுடன், அங்கு புரோக்கர்கள் கூட்டமாக நிற்பதால் குடியிருப்புகளுக்கு செல்லும் போலீசாரின் குடும்பத்தினர் மிகுந்த சிரமம் அடைகின்றனர்.
தடுக்கும் தனிப்பிரிவும் கண்டும் காணாமல் உள்ளது. இதனை எஸ்.பி., ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்தால் மட்டுமே தீர்வு காணமுடியும்.
-நமது நிருபர்-