/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஆம்புலன்சில் கர்ப்பிணிக்கு பெண் குழந்தை பிரசவம்
/
ஆம்புலன்சில் கர்ப்பிணிக்கு பெண் குழந்தை பிரசவம்
ADDED : ஏப் 27, 2024 04:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம் : விருத்தாசலம் அருகே ஆம்புலன்சில், கர்ப்பிணிக்கு பெண் குழந்தை பிறந்தது.
விருத்தாசலம் அடுத்த கிளிமங்களம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயராமன் மனைவி மகேஸ்வரி, 24; இவருக்கு நேற்று திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. உடன், 108 ஆம்புலன்சில் விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
வலி அதிகமானதால் வழியிலேயே ஆம்புலன்சை சாலையோரம் நிறுத்தி, ஆம்புலன்சில் இருந்த மருத்துவ உதவியாளர் மணிகண்டன் பிரசவம் பார்த்தார். அதில், மகேஸ்வரிக்கு பெண் குழந்தை பிறந்தது.
பின், தாய், சேய் இருவரையும் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு நலமுடன் உள்ளனர்.

