/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மகளிர் குழுக்களுக்கு திடீர் மவுசு
/
மகளிர் குழுக்களுக்கு திடீர் மவுசு
UPDATED : மார் 22, 2024 12:35 PM
ADDED : மார் 22, 2024 12:35 AM
லோக்சபா தேர்தல் நெருங்குவதால், மாவட்டத்தில் மகளிர் சுயஉதவிக்குழுவினருக்கு மவுசு அதிகரித்துள்ளது.
பெண்களிடம் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில், மகளிர் சுயஉதவிக்குழுக்கள் உருவாக்கப்பட்டது. ஊரக வளர்ச்சித்துறையின் மகளிர் திட்டம் மூலம் கிராமப்புற பெண்களுக்கு தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் கடனுதவி வழங்கப்படுகிறது.
அந்தந்த குழு தலைவி மூலம் மாதந்தோறும் கடன் தொகையில் குறிப்பிட்ட அசலுடன், வட்டியையும் சேர்த்து கட்டப்பட்டு வருகிறது. இதேபோல நகர, பேரூர் பகுதிகளில் வசிக்கும் பெண்கள், தனியார் மைக்ரோ பைனான்ஸ் வங்கிகளில் கடனுதவி பெறுகின்றனர்.
இதனால் தேர்தல் நேரத்தில் பண பட்டுவாடா செய்ய மகளிர் குழுவினரை அந்தந்த பகுதியில் உள்ள அரசியல் கட்சியினர் பயன்படுத்துவது வழக்கம். ஒவ்வொரு பகுதியில் உள்ள பெண்கள், அவர்களின் குடும்ப விபரம் இந்த மகளிர் குழுவினருக்கு நன்கு தெரியும் என்பதால், பட்டுவாடா செய்வது எளிது.
தற்போது லோக்சபா தேர்தல் நெருங்குவதால், குழுத்தலைவி, குழுவில் உள்ள முக்கிய நபர்களின் மொபைல் எண்களை அரசியல் கட்சியினர் பெற்று வருகின்றனர். இதனால் மகளிர் குழுவினருக்கு வழக்கம்போல மவுசு அதிகரித்துள்ளது.
- நமது நிருபர் -

