/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கள்ளக்காதலி அடித்து கொலை விருதை அருகே வாலிபர் கைது
/
கள்ளக்காதலி அடித்து கொலை விருதை அருகே வாலிபர் கைது
கள்ளக்காதலி அடித்து கொலை விருதை அருகே வாலிபர் கைது
கள்ளக்காதலி அடித்து கொலை விருதை அருகே வாலிபர் கைது
ADDED : ஆக 28, 2024 05:16 AM

விருத்தாசலம் : கள்ளக்காதலியை அடித்து கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
ஸ்ரீ முஷ்ணம் அடுத்த ஆத்துார் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெய்சங்கர். இவரது மனைவி வேம்பு, 34. இவர்களுக்கு ஒரு மகள், 2 மகன்கள் உள்ளனர்.
இந்நிலையில் வேம்பு, கரும்பு வெட்டும் வேலைக்கு சென்றபோது 2 ஆண்டிற்கு முன் கம்மாபுரம் மேட்டுத் தெருவைச் சேர்ந்த சின்னசாமி மகன் சிவா,30; என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இரண்டு ஆண்டாக இருவரும் தொடர்பில் இருந்து வந்தனர்.
இந்நிலையில், 2 நாட்களுக்கு முன் வேம்பு, கம்மாபுரத்தில் உள்ள சிவா வீட்டிற்கு வந்து தங்கினார்.
அப்போது, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த சிவா, வேம்புவை தலையில் பலமாக தாக்கிவிட்டு கார்மாங்குடியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டார்.
இந்நிலையில், வேம்புவின் மொபைல் போன் எண்ணிற்கு அவரது தோழி நேற்று தொடர்பு கொண்டுள்ளார்.
அப்போது, குடிபோதையில் இருந்த சிவா, வேம்புவை தாக்கிவிட்டு, அவரது போனை எடுத்து வந்துவிட்டதாக கூறியுள்ளார்.
அதன்பின், சிவா வீட்டிற்கு சென்று பார்த்தபோது, வேம்பு இறந்து கிடந்தார்.
தகவலறிந்த கம்மாபுரம் போலீசார், இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையில் சென்று, வேம்பு உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இதுகுறித்து வழக்கு பதிந்து, சிவாவை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.