/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ரயிலில் பயணித்த திருவாரூர் வாலிபர் சிதம்பரம் அருகே சடலமாக மீட்பு
/
ரயிலில் பயணித்த திருவாரூர் வாலிபர் சிதம்பரம் அருகே சடலமாக மீட்பு
ரயிலில் பயணித்த திருவாரூர் வாலிபர் சிதம்பரம் அருகே சடலமாக மீட்பு
ரயிலில் பயணித்த திருவாரூர் வாலிபர் சிதம்பரம் அருகே சடலமாக மீட்பு
ADDED : ஜூலை 02, 2024 04:45 AM

சிதம்பரம்: சிதம்பரம் அருகே ரயில்வே பாதையொட்டி வாலிபர் பலத்த காயத்துடன் இறந்து கிடந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சிதம்பரம் அடுத்த கிள்ளை ரயில் பாதை அருகே இருந்த புதரில் நேற்று காலை வாலிபர் ஒருவர் பலத்த காயத்துடன் இறந்து கிடந்தார்.
தகவலறிந்த சிதம்பரம் ரயில்வே இன்ஸ்பெக்டர் அருண்குமார் மற்றும் போலீசார் வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில் இறந்து கிடந்த வாலிபர் திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அடுத்த வாழ்க்கை கிராமத்தை சேர்ந்த துரைராஜ் மகன் வெங்கடேஷ்,24; என்பதும், பெயிண்டிங் வேலை செய்து வரும் அவர், கடந்த 30ம் தேதி நண்பர்களுடன் சென்னையில் இருந்து மன்னார்குடி செல்லும் ரயிலில், மயிலாடுதுறை வரை டிக்கெட் எடுத்து, முன்பதிவில்லா பெட்டியில் பயணம் செய்தது தெரிய வந்தது.
கடலுார் வந்தபோது, அவரது நண்பர்கள் வெங்கடேைஷ பார்த்துள்ளனர்.
ஆனால், மயிலாடுதுறையில் காணவில்லை எனவும் கூறியுள்ளனர்.
இறந்து கிடந்த வெங்கடேஷ் உடலில் காயங்கள் இருப்பதால், அவர் ரயிலில் இருந்து தவறி விழுந்து இறந்தாரா அல்லது கொலை செய்யும் நோக்கில் யாரேனும் கீழே தள்ளினார்களா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.