/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
குளிர்பானத்தில் மிதந்த குளவி; உணவு பாதுகாப்புத்துறை ஆய்வு
/
குளிர்பானத்தில் மிதந்த குளவி; உணவு பாதுகாப்புத்துறை ஆய்வு
குளிர்பானத்தில் மிதந்த குளவி; உணவு பாதுகாப்புத்துறை ஆய்வு
குளிர்பானத்தில் மிதந்த குளவி; உணவு பாதுகாப்புத்துறை ஆய்வு
ADDED : மே 29, 2024 05:06 AM

விருத்தாசலம் : விருத்தாசலத்தில் குளிர்பானத்தில் குளவி மிதந்தது குறித்து 'தினமலர்' நாளிதழில் வெளியான செய்தியை தொடர்ந்து, தயாரிப்பு நிறுவனத்தில் உணவு பாதுகாப்புத்துறையினர் ஆய்வு செய்தனர்.
விருத்தாசலம் அடுத்த அரசக்குழி மாதா கோவில் திருவிழாவில் பக்தர்களுக்கு குளிர்பானம் வழங்கப்பட்டது. அதில், ஜேக்கப் அந்தோணி என்பவரின் குழந்தைக்கு கொடுத்த குளிர்பானத்தில் குளவி மிதந்தது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதனைச் சுட்டிக்காட்டி, 'தினமலர்' நாளிதழில் நேற்று செய்தி வெளியானது.
அதைத் தொடர்ந்து, விருத்தாசலம் காட்டுக்கூடலுார் சாலை, ஜாகிர் உசேன் தெருவில் இயங்கி வரும் குளிர்பான கிடங்கில், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நல்லதம்பி, அன்பழகன், சுந்தரமூர்த்தி ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர்.
அப்போது, குளிர்பான தயாரிப்புக்கு பயன்படுத்தும் குடிநீர், பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் பாக்கிங் முறைகளை ஆய்வு செய்து, அங்கு தயாரிக்கும் மூன்று வகையான குளிர்பானங்களின் மாதிரிகளை, தஞ்சாவூர் உணவு பாதுகாப்பு மற்றும் தர சோதனை ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்தனர்.
ஆய்வக அறிக்கையின் பேரில் குளிர்பான நிறுவன உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.