/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
குமராட்சியில் ஆதார் சிறப்பு முகாம் ஊராட்சித் தலைவர் துவக்கி வைப்பு
/
குமராட்சியில் ஆதார் சிறப்பு முகாம் ஊராட்சித் தலைவர் துவக்கி வைப்பு
குமராட்சியில் ஆதார் சிறப்பு முகாம் ஊராட்சித் தலைவர் துவக்கி வைப்பு
குமராட்சியில் ஆதார் சிறப்பு முகாம் ஊராட்சித் தலைவர் துவக்கி வைப்பு
ADDED : ஜூன் 15, 2024 05:43 AM

சிதம்பரம்: குமராட்சி ஊராட்சியில் இலவச ஆதார் கார்டு சிறப்பு முகாமை ஊராட்சி தலைவர் தமிழ்வாணன் துவக்கி வைத்தார்.
குமராட்சி ஊராட்சி மற்றும் அஞ்சல் அலுவலகம் சார்பில், இரு நாட்கள் நடைபெறும் இலவச ஆதார் முகாம் நேற்று துவங்கியது.
குமராட்சி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் இரண்டு நாட்கள் நடைபெறும் ஆதார் சிறப்பு முகாமை குமராட்சி ஊராட்சி மன்றத் தலைவர் தமிழ்வாணன் தலைமை தாங்கி முகாமை துவக்கி வைத்தார். குமராட்சி துணை அஞ்சலக தலைவர் பாலமுருகன் முன்னிலை வகித்தார்.
போஸ்ட்மேன் ஞானாம்பாள், கணினி ஆப்ரேட்டர் அகிலன், அஞ்சலக அலுவலர்கள் ரமேஷ், ரஞ்சித், சுபாஷ், விமல், சந்திரபோஸ் , ஊராட்சி செயலர் சிலம்பரசன், வார்டு உறுப்பினர் ராஜமலையசிம்மன், சிங்கராசு, இளஞ்செழியன், சக்தி உள்பட பலர் கலந்து கொண்டனர். இரு நாட்கள் நடந்த முகாமில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று பயன் பெற்றனர்.