ADDED : ஆக 03, 2026 09:02 PM
அ நிறம் | அளவு
விருத்தாசலம்:: விருத்தாசலம் மணிமுக்தாற்றில் நீர்வரத்து இல்லாத நிலையில், ஆடிப்பெருக்கை முன்னிட்டு நேற்று அதிகாலை முதலே ஏராளமான புதுமண தம்பதிகள் வழிபாடு செய்தனர்.
இதற்காக, தேங்கிய மழைநீரிலும், அப்பகுதி மக்கள் தற்காலிகமாக தோண்டி வைத்திருந்த ஊற்று நீரில் திருமண மாலைகளை விட்டு, சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தினர். மேலும், இளம்பெண்கள் சிறப்பு பூஜை செய்து, வயதான சுமங்கலி பெண்களிடம் மஞ்சள் கயறு கட்டிக் கொண்டு ஆசி பெற்றனர்.
