நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த தட்டாம்பாளையம் மேல்மருவத்துார் ஆதிபராசக்தி வழிபாட்டுமன்றம் சார்பில் ஆடிப்பூர விழா நடந்தது.
கிழக்கு மண்டல இணை செயலாளர் முத்துராமன் தலைமை தாங்கினார். முத்துக்குமரன் சக்தி கொடியேற்றினார். ஒய்வுபெற்ற மாவட்ட நீதிபதி ராஜலட்சுமி, ஜவஹர், ஏழுமலை, மஞ்சுளா முன்னிலை வகித்தனர். கஞ்சி கலயம், முளைப்பாரி, தீச்சட்டி ஊர்வலம் நடந்தது.துணை ஆட்சியர் ராஜவேல், ஒய்வுபெற்ற ஆர்.டி.ஒ., பன்னீர்செல்வம், ரோட்டரி பாலமுருகன் பங்கேற்றனர்.

