நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்: நடியப்பட்டு அரசு உயர்நிலைப் பள்ளியில், குழந்தை தொழிலாளர் ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது.
விருத்தாசலம் அடுத்த நடியப்பட்டு அரசு உயர்நிலைப் பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு, தலைமை ஆசிரியர் பேசில்ராஜ் தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியர் சந்தோஷ்குமார் முன்னிலை வகித்தார். அதில், 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை வேலைக்கு அமர்த்தக் கூடாது. குழந்தை தொழிலாளர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். சிறு வயதில் கல்வி கற்பதில் கவனம் செலுத்த வேண்டும் என குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு உறுதிமொழியை மாணவர்கள் ஏற்றனர். ஆசிரியர்கள், அலுவலர்கள் பங்கேற்றனர்.