/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பு.முட்லுாரில் சர்வீஸ் சாலை பணி கிடப்பில் தாறுமாறாக வாகனங்கள் செல்வதால் அடிக்கடி விபத்து
/
பு.முட்லுாரில் சர்வீஸ் சாலை பணி கிடப்பில் தாறுமாறாக வாகனங்கள் செல்வதால் அடிக்கடி விபத்து
பு.முட்லுாரில் சர்வீஸ் சாலை பணி கிடப்பில் தாறுமாறாக வாகனங்கள் செல்வதால் அடிக்கடி விபத்து
பு.முட்லுாரில் சர்வீஸ் சாலை பணி கிடப்பில் தாறுமாறாக வாகனங்கள் செல்வதால் அடிக்கடி விபத்து
ADDED : ஆக 29, 2024 07:51 AM

பரங்கிப்பேட்டை: விழுப்புரம்- நாகை நான்கு வழிச்சாலையில், பு.முட்லுார் மேம்பாலத்தையொட்டி, சர்வீஸ் சாலை பணி கிடப்பில் போடப்பட்டதால், சாலையை குறுக்கிடும் வாகனங்களால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது.
விழுப்புரம்- நாகை இடையே, நான்கு வழி சாலை பணி 85 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது. இப்பணியில், சிதம்பரம் அருகே பு.முட்லுாரில் பரங்கிப்பேட்டை செல்லும் சாலைகயின் குறுக்கே மேம்பாலம் அமைக்கும் பணி முடிந்து, 20 நாட்களாக வாகன போக்குவரத்து துவங்கியுள்ளது.
ஆனால், பாலத்தையொட்டி, இரு புறமும் சர்வீஸ் சாலை அமைக்கப்படவில்லை. ஒரு புறம் சர்வீஸ் சாலைக்கு கையகப்படுத்தப்பட்ட இடத்தின் உரிமையாளருக்கு இழப்பீட்டு தொகை வழங்கப்படாததால், சாலை அமைக்கும் பணி நடக்காமல் உள்ளது. மற்றொரு புறம் சர்வீஸ் சாலையில் மின்சார டவர் மாற்றி அமைக்கப்படாததால் பணி கிடப்பில் உள்ளது.
சர்வீஸ்சாலை அமைத்தால் மட்டுமே, கடலுாரில் இருந்து புவனகிரி வழியாக சிதம்பரம் செல்லும் வாகனங்கள் பு.முட்லுார் மேம்பாலத்தின் அருகே கீழே இறங்கி, பாலத்தின் சப்வே வழியாக புவனகிரி சாலையை சென்றடைய முடியும்.
தற்போது, பு.முட்லுாரில் சர்வீஸ் சாலை அமைக்கப்படாததால், சிதம்பரத்தில் இருந்து கடலுார் செல்லும் வாகனங்கள், கடலுாரில் இருந்து புவனகிரி வழியாக சிதம்பரம் செல்லும் வாகனங்களும், பு.முட்லுார் பாலம் அருகே எதிரும் புதிருமாக குறுக்கிடுகிறது. அத்துடன், சிதம்பரத்தில் இருந்து கடலுார் மற்றும் கடலுாரில் இருந்து சிதம்பரம் நேரடியாக பாலத்தில் செல்லும் வாகனங்களும் வேகமாக செல்கின்றன.
பு.முட்லுாரில் புதிய மேம்பாலம் வழியாக வாகனங்கள் வேகமாக செல்லும் நிலையில், அந்த இடத்தில், பரங்கிப்பேட்டைக்கு செல்லும் சாலை சப்வே, தீர்த்தாம்பாளையம் சப்வே பகுதியில் நான்கு புறமும் வாகனங்கள் வந்து திரும்புவதால், தினமும் விபத்துகள் நடந்து வருகிறது.
எனவே, விபத்துக்களை தடுக்க, பு.முட்லுாரில் சர்வீஸ் சாலை பணியை விரைந்து அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.