/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ரூ.14 கோடியில் நவீன மார்க்கெட் பண்ருட்டி சேர்மன் ராஜேந்திரன் தகவல்
/
ரூ.14 கோடியில் நவீன மார்க்கெட் பண்ருட்டி சேர்மன் ராஜேந்திரன் தகவல்
ரூ.14 கோடியில் நவீன மார்க்கெட் பண்ருட்டி சேர்மன் ராஜேந்திரன் தகவல்
ரூ.14 கோடியில் நவீன மார்க்கெட் பண்ருட்டி சேர்மன் ராஜேந்திரன் தகவல்
ADDED : ஜூன் 16, 2024 06:08 AM

பண்ருட்டி: பண்ருட்டி நகராட்சி காய்கறி, மீன், கறி மார்க்கெட் ரூ. 14 கோடி மதிப்பீட்டில் நவீன மயமாக கட்டப்படும் என சேர்மன் ராஜேந்திரன் கூறினார்.
பண்ருட்டி நகராட்சி காய்கறி, மீன், கறி மார்க்கெட் பராமரிப்பின்றி கட்டடங்கள் வீணாகி வருகின்றன. இந்நிலையில் இப்பகுதியை நேற்று நகராட்சி சேர்மன் ராஜேந்திரன் ஆய்வு செய்தார். துணை சேர்மன் சிவா, நகராட்சி உதவி பொறியாளர் கார்த்திகேயன், கவுன்சிலர்கள் சண்முகவள்ளிபழனி, கிருஷ்ணராஜ், சோழன், தி.மு.க., பிரமுகர் லோகநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஆய்விற்கு பின் சேர்மன் ராஜேந்திரன் கூறுகையில், 14 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் காய்கறி, மீன்,கறி மார்க்கெட் நவீன முறையில் புதுப்பித்து கட்டப்பட உள்ளது. இதில் காய்கறி, மளிகை உள்ளிட்ட 150 கடைகள் கட்டப்படுகிறது. அதே வளாகத்தில் கறி, மீன் மார்க்கெட் பகுதி நவீன முறையில் கட்டித்தரப்பட உள்ளன. மார்க்கெட்டிற்கு பொதுமக்ள் வந்து செல்லவும், காய்கறிகள் இறக்குவதற்கும் அகலமான சாலை வசதிகள் செய்து தரப்படும். வியாபாரிகளிடம் கருத்துகேட்பு கூட்டம் நடத்திய பின் பூர்வாங்க பணிகள் துவங்கும் என, தெரிவித்தார்.