ADDED : பிப் 22, 2025 07:27 AM

கடலுார்; கடலுாரில் நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், அரங்கத்தை சுற்றியும் அரசின் சாதனை விளக்க புகைப்படங்கள் அலங்கரித்தது.
கடலுார் மஞ்சக்குப்பம் மைதானத்தில் நேற்று, அரசு துறைகள் சார்பில்
பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் முடிவுற்ற திட்டங்களை திறந்து
வைத்தும், புதிய திட்டப்பணிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். இதற்காக, அமைக்கப்பட்ட விழா அரங்கத்தை சுற்றியும், தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படங்கள் அடங்கிய பேனர்கள் வைக்கப்பட்டது. அதில், முதல்வரின் காலை உணவு திட்டம், மகளிர் உரிமை தொகை திட்டம், கல்லுாரி மாணவ, மாணவியருக்கான உதவித்தொகை திட்டம், கலைஞர் கனவு இல்லம் திட்டம் உள்ளிட்ட தமிழக அரசின் திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்த புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தது.
இந்த புகைப்படங்களை விழாவிற்கு வந்த பயனாளிகள், பொதுமக்கள் ஆர்வமுடன் பார்வையிட்டு சென்றனர்.