/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
லட்சுமி சோரடியா பள்ளிகள் பிளஸ் 2 தேர்வில் சாதனை
/
லட்சுமி சோரடியா பள்ளிகள் பிளஸ் 2 தேர்வில் சாதனை
ADDED : மே 07, 2024 11:20 PM

கடலுார் : கடலுார், திருப்பாதிரிப்புலியூர் எஸ்.எஸ்.ஆர்., நகர் லட்சுமி சோரடியா நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதிய மாணவி தேவசேனா 600க்கு 575 மதிப்பெண் பெற்று பள்ளி அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்தார்.
மாணவிகள் அக்ஷ்யா 569 மதிப்பெண் பெற்று இரண்டாமிடம், ரோகிணி தேவி 548 மதிப்பெண் பெற்று மூன்றாமிடம், சபிதா 545 மதிப்பெண் பெற்று நான்காமிடம் பிடித்து சாதனை படைத்தனர்.
400க்கு மேல் 28 பேரும், 500க்கும் மேல் 15 பேரும் மதிப்பெண் பெற்றனர். இக்கல்வி நிறுவனத்தின் மற்றொரு படைப்பான திருப்பாதிரிப்புலியூர் பாபுராவ் தெருவில் உள்ள ஸ்ரீலட்சுமி சோரடியா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர் ரோகன் முதலிடம் பிடித்து சாதனை படைத்தார்.
தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளித் தாளாளர் மாவீர்மல் சோரடியா, முதல்வர்கள் சந்தோஷ்மல் சோரடியா, அசோக்மல் சோரடியா, துணை முதல்வர் பத்தாகான் ஆகியோர் பாராட்டினர்.
பள்ளியில் எல்.கே.ஜி., முதல், பிளஸ் 2 வரை சேர்க்கை நடைபெறுகிறது என, தாளாளர் மாவீர்மல் சோரடியா கூறினார்.

