/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
நீட் தேர்வில் சாதனை: மாணவர்களுக்கு பாராட்டு
/
நீட் தேர்வில் சாதனை: மாணவர்களுக்கு பாராட்டு
ADDED : ஜூலை 02, 2024 05:24 AM

சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அடுத்த பூதங்குடி எஸ்.டி.சீயோன் பள்ளியில், நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று சாதனை புரிந்த மாணவர்களை பாராட்டி கேடயம் வழங்கப்பட்டது.
நடந்து முடிந்த நீட் தேர்வில், இப்பள்ளி மாணவி அஸ்வினி 666 , இளம்பாரதி 655, பவித்ரா 620 மதிப்பெண் பெற்று மாநில அளவில் சாதனை படைத்துள்ளனர். அவர்களுக்கு பள்ளியில் பாராட்டு விழா நடத்தப்பட்டது.
டாக்டர் வினோத்கண்ணன், டாக்டர் ஞானவிநாயகன், பள்ளி தாளாளர் சாமுவேல்சுஜின், நிர்வாகக்குழு இயக்குனர் தீபாசுஜின் ஆகியோர் மாணவர்களுக்கு கேடயம் வழங்கி பாராட்டினர்.
பள்ளி முதல்வர் இப்ராகிம்ஷரிப், தலைமை ஆசிரியர் ஆண்டனிராஜ், பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.