/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பேனர் வைப்பதில் விதிமீறினால் நடவடிக்கை: டி.எஸ்.பி., எச்சரிக்கை
/
பேனர் வைப்பதில் விதிமீறினால் நடவடிக்கை: டி.எஸ்.பி., எச்சரிக்கை
பேனர் வைப்பதில் விதிமீறினால் நடவடிக்கை: டி.எஸ்.பி., எச்சரிக்கை
பேனர் வைப்பதில் விதிமீறினால் நடவடிக்கை: டி.எஸ்.பி., எச்சரிக்கை
ADDED : மே 08, 2024 11:34 PM

கடலுார் : கடலுார் நகரில் விதிமுறை மீறி பேனர் வைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என, டி.எஸ்.பி., பிரபு எச்சரித்துள்ளார்.
கடலுார் மாநகராட்சி பகுதியில் பேனர்கள் வைப்பதில் விதிமுறைகள் பின்பற்றுவது தொடர்பாக, மாநகராட்சி மற்றும் போலீஸ் துறை சார்பில், டிஜிட்டல் பிரிண்டர்ஸ் கடை உரிமையாளர், பேனர் அமைப்பாளர்கள் விழிப்புணர்வு கூட்டம் புதுநகர் போலீஸ் நிலையத்தில் நேற்று நடந்தது.
டி.எஸ்.பி., பிரபு தலைமை தாங்கினார்.
மாநகராட்சி பொறியாளர் ராஜசேகரன், புதுநகர் எஸ்.ஐ., கதிரவன் மற்றும் டிஜிட்டல் அச்சக உரிமையாளர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் டி.எஸ்.பி., பிரபு பேசுகையில், நகரில் பேனர் வைக்க மாநகராட்சியில் முறைப்படி அனுமதி பெற வேண்டும். கண்ட இடங்களில் பேனர் வைக்க கூடாது.
அனுமதிக்கப்பட்ட இடத்தில் குறிப்பிட்ட நாட்கள் மட்டும் வைக்க வேண்டும், அரசு அனுமதித்துள்ள அளவில் மட்டும் வைக்க வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டன.
மேலும், பேனர் அச்சடிக்க கொடுக்கும் நபர்கள் குறித்து போலீஸ் நிலையத்தில், பிரிண்டர்ஸ் சார்பில் தகவல் கொடுக்க வேண்டும். விதிமுறைகள் மீறி பேனர் வைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என, எச்சரித்தார்.