/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கொசு மருந்து அடிக்க நடவடிக்கை தேவை
/
கொசு மருந்து அடிக்க நடவடிக்கை தேவை
ADDED : ஜூன் 20, 2024 08:54 PM
மந்தாரக்குப்பம்: மந்தாரக்குப்பம் அதை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்கள் பெய்த கன மழையால் கொசுக்கள் அதிகரிப்பால், கொசு மருந்து அடிக்கும் பணியை தீவீரப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர.
மந்தாரக்குப்பம் அதை சுற்றியுள்ள பகுதிகளில் கொசு அதிகரிப்பால் பொதுமக்களுக்கு சளி, இருமல் மற்றும் காய்ச்சல் உள்ளிட்டவைகளால் பொதுமக்கள் பாதிப்பு அடைந்து வருகின்றனர. எனவே, சுகாதாரத் துறையினர் கடைகள் மற்றும் வீடுகளுக்கு சென்று ஆய்வு செய்து, கொசு வளரும் இடங்களை கண்டறிந்து, காய்ச்சல் அதிகம் பரவும் இடங்களில் முகாம் அமைத்து கண்டறிதல் வேண்டும். மேலும் தேவையில்லாத பொருட்களை அகற்றவும், நீரில் கொசு புழுக்கள் உள்ளதா என ஆய்வு செய்ய வேண்டும். குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் தேங்காமால் துாய்மை பணி மேற்கொள்ளப்பட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பேரூராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளில் கொசு மருந்தும் அடிக்கும் பணியை தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.