/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பிளஸ் 2 தேர்வில் கூடுதல் தேர்ச்சி; கலெக்டர் முயற்சி கை கொடுத்தது
/
பிளஸ் 2 தேர்வில் கூடுதல் தேர்ச்சி; கலெக்டர் முயற்சி கை கொடுத்தது
பிளஸ் 2 தேர்வில் கூடுதல் தேர்ச்சி; கலெக்டர் முயற்சி கை கொடுத்தது
பிளஸ் 2 தேர்வில் கூடுதல் தேர்ச்சி; கலெக்டர் முயற்சி கை கொடுத்தது
ADDED : மே 07, 2024 11:21 PM
பிளஸ் 2 தேர்வில் 94.36 சதவீதம் பெற்று தமிழகத்தில் 22 ம் இடத்திற்கு முன்னேறியதற்கு கலெக்டரின் பங்கு மிக முக்கியமானது.
கடந்த காலங்களில் பிளஸ் 2, மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில் கடலுார் மாவட்டம் கடைசி இடத்தில் இருந்தது. எவ்வளவோ முயற்சி செய்தும் ஓரிரு இலக்கத்தை தவிர 'பெருசா' முன்னேற்றம் இல்லை.
ஆனால் கலெக்டராக அருண் தம்புராஜ் பொறுப்பேற்ற பின் கடலுார் வருவாய் மாவட்டத்தில் கல்வி பின்தங்கிய நிலையில் இருப்பதை முன்னுக்கு கொண்டு வர பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார்.
கல்வி அதிகாரிகளுடனான ஆய்வுக் கூட்டத்தை அடிக்கடி நடத்தினார். மாணவர்களின் கல்வி தரம் உயரவேண்டும் என வலியுறுத்தி அதிகாரிகளிடம் பல முறை கடிந்துள்ளார்.
கலெக்டரின் இந்த கண்டிப்பு கல்வித்துறை அதிகாரிகள் வெளியில் சொல்லிக்கூட புலம்பினர். இதன் விளைவாக பள்ளிகளுக்கு அடிக்கடி ஆய்வு நடத்தினர். குறைபாடு உள்ள பள்ளிகளுக்கு ஆலோசனை கூறினர்.
கலெக்டர் அரும் தம்புராஜின் கண்டிப்பும், நடவடிக்கையும் சேர்ந்து பிளஸ் 2 மாணவர்கள் தேர்ச்சிக்கு பெரும் கைகொடுத்துள்ளது. ஏற்கனவே இருந்த நிலை மாறி இன்று மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில் 94.36 சதவீதம் தேர்ச்சி பெற்று கடைசி மாவட்டமாக இருந்ததை 22ம் இடத்திற்கு உயர்ந்துள்ளது.
இது குறித்து கலெக்டர் அருண் தம்புராஜ் கூறுகையில், ஆசிரியர்களின் முழு முயற்சியும், ஒத்துழைப்பும்தான் மாணவர்கள் தேர்ச்சி சதவீதம் கூடுதலானதற்கு காரணம்.
வரும் கல்வியாண்டில் பிளஸ் 2 தேர்வில் 96 சதவீதம் இலக்கு நிர்ணயித்து தேர்ச்சி பெற ஆசிரியர்களை வலியுறுத்துவேன்' என்றார்.
-நமது நிருபர்-

