/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அ.தி.மு.க., பிரமுகர் மீது தாக்குதல் போலீஸ் ஸ்டேஷன் முற்றுகை விருத்தாசலம் அருகே பரபரப்பு

ADDED : ஆக 31, 2024 02:57 AM

விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே அ.தி.மு.க., பிரமுகரை பீர் பாட்டிலால் தாக்கியவர்களை கைது செய்யக்கோரி, அ.தி.மு.க., வினர் போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது.
மங்கலம்பேட்டை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பெருமாள் மகன் ராதாகிருஷ்ணன், 55. அ.தி.மு.க., பிரமுகர். இவருக்கும் எம்.அகரம் கிராமத்தைச் சேர்ந்த அரியமுத்து மகன் அசோக் என்பவருக்கும் முன்விரோதம் உள்ளது.
கடந்த 26ம் தேதி, ராதாகிருஷ்ணன் பைக்கில் சென்றபோது, அவரை வழிமறித்த அசோக், ஆதரவாளர்கள் முத்துலிங்கம் மகன் தமிழ்செல்வன், பா.ஜ., பிரமுகர்; பஞ்சாட்சரம் மகன் திருஞானம், தி.மு.க., ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் ஆகியோர் அசிங்கமாக திட்டி, பீர் பாட்டிலால் தாக்கினார்.
படுகாயமடைந்த ராதாகிருஷ்ணன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின் பேரில், மங்கலம்பேட்டை போலீசார் அசோக், தமிழ்ச்செல்வன், திருஞானம் ஆகியோர் மீது வழக்குப் பதிந்தனர். இதுவரை கைது செய்யப்படவில்லை.
ஆத்திரமடைந்த அ.தி.மு.க.,வினர் நேற்று காலை 11:00 மணியளவில் மங்கலம்பேட்டை போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய போலீசார், மூவரையும் விரைந்து கைது செய்வதாக உறுதியளித்தனர். அதன்பேரில், அனைவரும் கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.