/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பாகூரில் அ.தி.மு.க., பிரமுகர் கொலை கடலுாரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு
/
பாகூரில் அ.தி.மு.க., பிரமுகர் கொலை கடலுாரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு
பாகூரில் அ.தி.மு.க., பிரமுகர் கொலை கடலுாரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு
பாகூரில் அ.தி.மு.க., பிரமுகர் கொலை கடலுாரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு
ADDED : ஜூலை 29, 2024 05:20 AM

கடலுார் : புதுச்சேரி எல்லையில் கடலுார் அ.தி.மு.க., பிரமுகர் வெட்டி கொலை செய்யப்பட்டதால் முன்னெச்சரிக்கையாக திருப்பாதிரிபுலியூர் பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
கடலுார் திருப்பாதிரிபுலியூர் நவநீதம் நகரைச் சேர்ந்த ராமலிங்கம் மகன் பத்மநாபன் 45; திருப்பாதிரிபுலியூர் 25வது வார்டு அ.தி.மு.க., அவைத் தலைவர். இவரை புதுச்சேரி மாநிலம் பாகூர் அடுத்த இருளன் சந்தை அருகே மர்ம நபர்கள் வெட்டி கொலை செய்தனர்.
பத்மநாபன் கொலை செய்யப்பட்ட சம்பவம் கடலுார் நகரில் பரவியது. இதனால் பத்மநாபன் மனைவி சத்தியா, உறவினர்கள், அ.தி.மு.க.,வினர் திருப்பாதிரிபுலியூர் போலீஸ் நிலையம் முன் திரண்டு, கொலை குற்றவாளிகளை உடன் கைது செய்ய வேண்டும் என முற்றுகையிட்டனர். இதனால் திருப்பாதிரிபுலியூர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
போலீசார் திரண்ட அ.தி.மு.க.,வினரிடம் புதுச்சேரி மாநில போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அவர்கள் தான் கொலையாளிகளை கைது செய்ய வேண்டும் என கூறி அனுப்பி வைத்தனர்.
அ.தி.மு.க., பிரமுகர் பத்மநாபன் கொலை சம்பவத்தால் நகரில் அசம்பாவிதங்கள் நடக்காமல் இருக்க திருப்பாதிரிபுலியூர் மற்றும் நவநீதம் நகர் பகுதிகளில் 50க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுப்படுத்தப்பட்டனர்.