/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அ.தி.மு.க., உறுப்பினர் அட்டை வழங்கல்
/
அ.தி.மு.க., உறுப்பினர் அட்டை வழங்கல்
ADDED : ஆக 05, 2024 12:05 AM

வடலுார்: கடலுார் தெற்கு மாவட்ட அ.தி.மு.க., சார்பில் உறுப்பினர்களுக்கு அட்டை வழங்கும் நிகழ்ச்சி நெய்வேலி அண்ணா தொழிலாளர்கள் ஊழியர் சங்க அலுவலகத்தில் நடந்தது.
ஒன்றிய செயலாளர்கள் கோவிந்தராஜ், பாஷியம், கமலக்கண்ணன், வினோத், நகர செயலாளர்கள்பாபு, ஆனந்தபாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நெய்வேலி நகர செயலாளர் கோவிந்தராஜ் வரவேற்றார்.
தெற்கு மாவட்ட செயலாளர் சொரத்துார் ராஜேந்திரன் தலைமை தாங்கி, உறுப்பினர் அட்டைகளை வழங்கி பேசுகையில், 'முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் நற்பெயர்களை காப்பாற்றிட, நாம் அனைவரும் ஒற்றுமையாக உழைத்தால், இந்த இயக்கம் மீண்டும் வலிமை பெறும். பழனிசாமி தலைமையில் மீண்டும் ஆட்சி அமைக்கும்' என்றார்.
முன்னாள் எம்.எல்.ஏ., சிவசுப்ரமணியன், தொழிற்சங்க பேரவை இணை செயலாளர் சூரியமூர்த்தி, மாவட்ட பேரவை செயலாளர் ராஜசேகர், விழுப்புரம் மண்டல தகவல் தொழில் நுட்ப பிரிவு இணை செயலாளர் ராதாகிருஷ்ணன், மாவட்ட அவை தலைவர் முத்துலிங்கம், மாவட்ட பொருளாளர் தேவநாதன், மாவட்ட துணை செயலாளர்கள் கோவிந்தராஜ், ஞான செல்வி கல்யாண சுந்தரம், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் பாண்டுரங்கன், சத்யா அன்பு, மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு திருமலைவாசன், மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்ற செயலாளர் தங்கப்பன், அண்ணா தொழிலாளர் ஊழிய சங்க நிர்வாகிகள் தேவானந்தம், வெற்றி உட்பட பலர் பங்கேற்றனர்.