/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அரசு பள்ளிகளில் சேர்க்கை ஆசிரியர்களுக்கு ஆலோசனை
/
அரசு பள்ளிகளில் சேர்க்கை ஆசிரியர்களுக்கு ஆலோசனை
ADDED : மே 15, 2024 11:11 PM
புவனகிரி: புவனகிரியில், அரசு பள்ளிகளில் மாணவர்களை அதிகம் சேர்ப்பது குறித்து, தலைமை ஆசிரியர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.
புவனகிரி ஒன்றிய தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக் கான ஆலோசனைக் கூட் டம் நடந்தது.
புவனகிரியில் நடந்த கூட்டத்தில் தலைமை ஆசிரியர் துரைமணிராஜன் வரவேற்றார்.
வட்டார கல்வி அலுவலர்கள் லட்சுமி, செல்வி, வட்டார வள மைய மேற்பார்வையாளர் சக்திவேல், ஆசிரியர் பயிற்றுனர் மதினா முன்னிலை வகித்தனர்.
விருத்தாசலம் கல்வி மாவட்ட தொடக்கல்வி அலுவலர் சேகர் தலைமை தாங்கி பேசுகையில், புதிய கல்வி ஆண்டில் அதிகளவில் மாணவர்களை அரசு பள்ளியில் சேர்க்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகள் வழங்கினார்.
கூட்டத்தில் புவனகிரி ஒன்றியத்தில் பணியாற்றும் அனைத்து தலைமை ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
தலைமை ஆசிரியர் சத்தியநாராயணன் நன்றி கூறினார்.