/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பைக் ஓட்டிய சிறுவன் பெற்றோருக்கு அறிவுரை
/
பைக் ஓட்டிய சிறுவன் பெற்றோருக்கு அறிவுரை
ADDED : செப் 11, 2024 01:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுாரில் பைக் ஓட்டிய சிறுவனின் பெற்றோரை போலீசார் வரவழைத்து அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.
கடலூர் பாரதி சாலையில், போக்குவரத்து சப் இன்ஸ்பெக்டர்கள் மகாலிங்கம், ராமச்சந்திரன் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த சிறுவனை நிறுத்தி விசாரித்தனர். அதில், சிறுவனுக்கு 16 வயது என்பது தெரியவந்தது. இதன் பின், சிறுவனின், பெற்றோருக்கு போலீசார் தகவல் தெரிவித்து வரவழைத்தனர். அவரிடம், 18 வயது நிரம்பாத சிறுவர்களிடம் பைக் ஓட்ட கொடுக்கக் கூடாது. டிரைவிங் லைசென்ஸ் பெற்ற பிறகே பைக் ஓட்ட அனுமதிக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கி, பெற்றோருடன் சிறுவனை அனுப்பி வைத்தனர்.