/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கார் டிரைவரை கடத்திய பாசக்கார நண்பர் கைது
/
கார் டிரைவரை கடத்திய பாசக்கார நண்பர் கைது
ADDED : ஆக 15, 2024 04:36 AM

திட்டக்குடி: திட்டக்குடி அருகே கார் டிரைவரை கடத்தி, பணம் கேட்டு மிரட்டிய அவரது நண்பரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் வண்டிமேட்டை சேர்ந்தவர் ராஜசேகரன்,42; கடலுார் மாவட்டம், ராமநத்தத்தில், மனைவியுடன் வசித்து வருகிறார். சொந்தமாக கார் வைத்து, வாடகைக்கு ஓட்டி வருகிறார்.
கடந்த 12ம் தேதி இவரது நண்பரான உளுந்துார்பேட்டை அடுத்த ஷேக்உசேன் பேட்டை நுார்கான்,49; பெங்களூரு செல்ல வேண்டும் என அழைத்து சென்று, கிருஷ்ணகிரியில் லாட்ஜில் அடைத்து வைத்து, அவரது மனைவிக்கு போன் செய்து பணம் கேட்டு மிரட்டினார்.
நுார்கான் வெளியே சென்ற நேரத்தில் தப்பிய ராஜசேகரன், கிருஷ்ணகிரி போலீசில் தகவல் தெரிவித்தார். போலீசார் விரைந்து சென்று நுார்கானை கைது செய்தனர்.
இந்நிலையில் ராஜசேகரன் மனைவி முத்துலட்சுமி அளித்த புகாரின் பேரில் ராமநத்தம் போலீசார் விரைந்து சென்று கிருஷ்ணகிரி போலீஸ் ஸ்டேஷனில் இருந்த ராஜசேகர் மற்றும் நுார்கானை ராமநத்தம் அழைத்து வந்து ராஜசேகரனை அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர்.
நுார்கானை விசாரணை செய்ததில், போதிய வருமானம் இல்லாததால், கார் வைத்துள்ள ராஜசேகரனை கடத்தி பணம் பறிக்க முயன்றது தெரிய வந்தது.
அதன்பேரில் நுார்கானை கைது செய்த போலீசார், அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், அவருக்கு உதவிய நண்பர்கள் இருவரை தேடிவருகின்றனர்.