/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
முதுமை ஆராய்தல் அறிக்கை அய்யப்பன் எம்.எல்.ஏ., வெளியீடு
/
முதுமை ஆராய்தல் அறிக்கை அய்யப்பன் எம்.எல்.ஏ., வெளியீடு
முதுமை ஆராய்தல் அறிக்கை அய்யப்பன் எம்.எல்.ஏ., வெளியீடு
முதுமை ஆராய்தல் அறிக்கை அய்யப்பன் எம்.எல்.ஏ., வெளியீடு
ADDED : ஜூன் 15, 2024 05:39 AM

கடலுார்: கடலுார் ெஹல்பேஜ் இந்தியா நிறுவனத்தில் முதியோர் வன்கொடுமைக்கு எதிரான விழிப்புணர்வு தின நிகழ்ச்சி நடந்தது.
ஹெல்பேஜ் இந்தியா ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன் வரவேற்றார். ெஹல்பேஜ் இந்தியா துணை இயக்குநர் சத்தியபாபு, முன்னிலை வகித்தார். அய்யப்பன் எம்.எல்.ஏ., சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இந்தியாவில் முதுமை ஆராய்தல் மற்றும் பராமரிப்பு சவால்கள் குறித்த விவரங்கள் அடங்கிய அறிக்கையை வெளியிட்டு சிறப்புரையாற்றினார். மருத்துவத்துறைஇணை இயக்குநர் ஹிரியன் ரவிக்குமார், முதியோர்களின் வன்கொடுமைக்கு எதிரான கையெழுத்து இயக்கத்தை துவக்கி வைத்தார். மூத்த வழக்கறிஞர் ஜோதிலிங்கம் தலைமையில் கல்லுாரி மாணவர்கள் முதியோர் வன்கொடுமைக்கு எதிரான விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றனர்.
அப்போது, சுகாதார அலுவலக மாவட்ட திட்ட மேலாளர் செல்வம், மாவட்ட மேற்பார்வையாளர் கதிரவன், அரசு கலைக்கல்லுாரி பேராசிரியர் அருள்தாஸ், மூத்த குடிமக்கள் கூட்டமைப்பு தர்மலிங்கம், பாஸ்கரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
ஒருங்கிணைப்பாளர் பாரத்வேல் நன்றி கூறினார்.