/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
விவசாய தொழிலாளர் சங்கம் மனு கொடுக்கும் போராட்டம்
/
விவசாய தொழிலாளர் சங்கம் மனு கொடுக்கும் போராட்டம்
ADDED : ஆக 02, 2024 10:27 PM

கடலுார்,- கடலுார் ஒன்றிய தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில், மனுகொடுக்கும் போராட்டம் நடந்தது.
கடலுார் பி.டி.ஓ., அலுவலகம் முன் நடந்த போராட்டத்திற்கு, மாவட்டக்குழுகிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார்.
வீரப்பன், சுரேஷ், கணேசன் முன்னிலைவகித்தனர். ஏ.ஐ.டி.யூ.சி., மாவட்ட தலைவர் குளோப், தொழிலளார் சங்க மாவட்டதலைவர் சுப்ரமணியன், மாவட்ட செயலாளர் முருகையன் கண்டன உரையாற்றினர்.
இதில், கடலுார் ஒன்றியத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் அனைவருக்கும் நுாறுநாள் வேலை வழங்க வேண்டும். சட்டக்கூலி 319 ரூபாயை முழுமையாக வழங்க வேண்டும்.
நுாறுநாள் வேலை திட்டத்தை விவசாயத்திற்கு பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்திமனு கொடுத்தனர்.
அப்போது, நிர்வாகிகள் அமாவாசை, ராஜசேகர், நாகராஜ், அரசன், தேவராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.