/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தக்கை பூண்டு சாகுபடி வயல் வேளாண் அதிகாரிகள் ஆய்வு
/
தக்கை பூண்டு சாகுபடி வயல் வேளாண் அதிகாரிகள் ஆய்வு
ADDED : ஆக 02, 2024 10:55 PM

கடலுார், -வெள்ளப்பாக்கத்தில் அரசு திட்டங்களின் செயல்பாடுகளை வேளாண் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
வெள்ளப்பாக்கம் கிராமத்தில் தமிழக முதல்வரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள தக்கைப் பூண்டு விதைத்து உள்ள வெங்கடேசன் வயலை கடலுார் வேளாண்மை இணை இயக்குநர் கென்னடி ஜெபக்குமார், துணை இயக்குநர் பிரேம்சாந்தி ஆகியோர் ஆய்வு செய்தனர்.
பசுந்தாள் உரப்பயிர் மூலமாக மண்வளம் பாதுகாக்கப்பட்டு மண்ணில் வாழும் நுண்ணுயிர்கள் பாதுகாக்கப்பட்டு மண்ணின் சத்துக்கள் அதிகரிக்கும் என அதிகாரிகள் கூறினர்.
வேளாண்மை உதவி இயக்குனர் சுரேஷ், வேளாண்மை அலுவலர்கள் பொன்னிவளவன், தமிழ்பிரியன், உதவி அலுவலர் சிவமணி, பயிர் அறுவடை பரிசோதனையாளர் சத்தியமூர்த்தி உடனிருந்தனர்.