/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
விதை விற்பனை நிலையங்களில் வேளாண் அதிகாரி ஆய்வு
/
விதை விற்பனை நிலையங்களில் வேளாண் அதிகாரி ஆய்வு
ADDED : ஜூன் 20, 2024 09:02 PM

சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு விதை விற்பனை நிலையங்களில், வேளாண் விதை ஆய்வு துணை இயக்குனர் ஆய்வு மேற்கொண்டார்.
டெல்டா பகுதிகளான காட்டுமன்னார்கோவில், சிதம்பரம், பரங்கிப்பேட்டை, குமராட்சி, கீரப்பாளையம், புவனகிரி, சேத்தியாத்தோப்பு வட்டாரத்தில, அரசு மற்றும் தனியார் விதை விற்பனை நிலையங்கள் மற்றும் விதை சுத்திகரிப்பு நிலையங்கள் உள்ளன. இவைகளில், வைக்கப்பட்டுள்ள விதை இருப்புகள் குறித்து, மாவடட வேளாண் விதை ஆய்வு துணை இயக்குனர் சரவணன் ஆய்வு செய்தார்.
அப்போது, விவசாயிகள் உரிமம் பெற்ற விதை விற்பனை நிலையங்களில் மட்டுமே ரசீதுடன் விதைகள் வாங்க அறிவுறுத்தினார். மேலும், விதை சட்டத்தை பின்பற்றி விதை விற்பனை மேற்கொள்ளாத விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.
விதை ஆய்வாளர் தமிழ்வேல் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.