/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அ.தி.மு.க., பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்
/
அ.தி.மு.க., பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்
ADDED : மார் 07, 2025 07:05 AM

கடலுார் கடலுாரில், வடக்கு மாவட்ட அ.தி.மு.க., சார்பில் பூத் கமிட்டி அமைப்பது சம்பந்தமாக ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
கடலுார் வடக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சம்பத் தலைமை தாங்கினார். மாநில சிறுபான்மை பிரிவு செயலாளர் அப்துல் ரஹீம் முன்னிலை வகித்தார். அவைத் தலைவர் சேவல் குமார் வரவேற்றார். மாநில மீனவரணி இணை செயலாளர் தங்கமணி, சுப்பிரமணியன், மருத்துவர் அணி தலைவர் சீனுவாசராஜா, ஆறுமுகம், கார்த்திகேயன் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் சம்பத் பேசுகையில், கடலுார், பண்ருட்டி சட்டசபை தொகுதியில் ஒவ்வொரு பூத்திற்கும் அதே பகுதியை சேர்ந்த 9 பேரை பொறுப்பாளராக நியமிக்க வேண்டும். இவர்கள் அனைவரும் 35 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். இதில் மூன்று பேர் கட்டாயம் பெண்களாக இருக்க வேண்டும்.
அனைவரும் ஒற்றுமையாக களப்பணி ஆற்றி ஒவ்வொரு பூத்திலும் அதிக ஓட்டுகள் பெற்றுத்தர வேண்டும் என்றார்.கூட்டத்தில் ஒன்றிய செயலாளர் காசிநாதன், அழகானந்தம், வெங்கட்ராமன், வழக்கறிஞர் பாலகிருஷ்ணன், கந்தன், வினோத்ராஜ், மாவட்ட சார்பணி செயலாளர்கள் வர்த்தகப்பிரிவு வரதராஜன், ஸ்ரீநாத், சாந்தி, குப்புராஜ், அண்ணா தொழிற்சங்கம் பாலகிருஷ்ணன் கலந்து கொண்டனர்.