/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அ.தி.மு.க., பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்
/
அ.தி.மு.க., பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்
ADDED : மார் 11, 2025 04:25 AM

சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பு அடுத்த வடப்பாக்கத்தில் அ.தி.மு.க.. பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு, கீரப்பாளையம் மேற்கு ஒன்றிய செயலாளர் கருப்பன் தலைமை தாங்கினார். விவசாய அணி மாவட்ட பொருளாளர் சரவணன், முன்னாள் ஒன்றிய செயலாளர் கோவி ராசாங்கம், ஜெ., பேரவை துணைச் செயலாளர் ராமச்சந்திரன், எம்.ஜி.ஆர்., மன்ற மாவட்ட இணைச் செயலாளர் கமலக்கண்ணன், தகவல் தொழில்நுட்ப அணி ஆனந்தகுமார், ரவி, கலை இலக்கிய அணி மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கிளைச் செயலாளர்கள் ரவிச்சந்திரன், இளவரசன் வரவேற்றனர்.
மாவட்ட விவசாய அணி செயலாளர் கனகசிகாமணி பூத்கமிட்டி உறுப்பினர்கள், தலைவர்கள், செயலாளர்களை தேர்வு செய்து ஆலோசனை நடத்தினார்.
கூட்டத்தில், 2026 சட்டசபை தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்று பொதுச் செயலாளர் பழனிசாமியை மீண்டும் முதல்வராக்குவது. புவனகிரி தொகுதியில் மாவட்ட செயலாளர் அருண்மொழிதேவனுக்கு அதிகப்படியான ஓட்டுகளை பெற்று வெற்றி பெறச்செய்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.