/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
திட்டக்குடியில் அ.தி.மு.க., பொதுக்கூட்டம்
/
திட்டக்குடியில் அ.தி.மு.க., பொதுக்கூட்டம்
ADDED : மார் 01, 2025 06:53 AM

திட்டக்குடி; தமிழகத்தில் சாதாரண பெண்கள் முதல் பெண் போலீஸ் உயரதிகாரிகள் வரை பாதுகாப்பு இல்லா சூழல்தான் உள்ளது என புவனகிரி தொகுதி எம்.எல்.ஏ., அருண்மொழிதேவன் பேசினார்.
திட்டக்குடியில் அ.தி.மு.க., சார்பில் நடந்த ஜெ., பிறந்த நாள் பொதுக்கூட்டத்திற்கு, நகர செயலாளர் நீதிமன்னன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் நல்லுார் தெற்கு ராஜேந்திரன், மங்களூர் கிழக்கு இளங்கோவன், அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் ராமலிங்கம், மருத்துவரணி செயலாளர் கொளஞ்சிநாதன் முன்னிலை வகித்தனர். மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்ற செயலாளர் ராஜேந்திரன், ஜெ., பேரவை மாவட்ட இணை செயலாளர் சுப்பிரமணியன், மங்களூர் கிழக்கு ஒன்றிய ஜெ., பேரவை செயலாளர் வேல்முருகன் உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ., சிறப்புரையாற்றினார்.
விவசாய அணி நகர செயலாளர் பாஸ்கர் நன்றி கூறினார்.