/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஓய்வுபெற்ற ஆசிரியர் பள்ளிக்கு உதவி
/
ஓய்வுபெற்ற ஆசிரியர் பள்ளிக்கு உதவி
ADDED : மே 02, 2024 12:21 AM

சிதம்பரம் : சிதம்பரம் ராமகிருஷ்ணா மேல்நிலைப் பள்ளியில் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் முத்துக்குமரன், ராஜவேலு ஆகியோருக்கு பாராட்டு விழா நடந்தது.
பள்ளி செயலாளர் பாலசுப்ரமணியன் தலைமை தாங்கினார். தலைமையாசிரியர் சங்கரன் வரவேற்றார். பள்ளிக்குழு தலைவர் ராமநாதன், துணைத் தலைவர் திருநாவுக்கரசு, பள்ளிக்குழு உறுப்பினர்கள் கலியபெருமாள், சுவாமிநாதன், ஓய்வு பெற்ற ஆசிரியர் கபீர்தாஸ், சிதம்பரம் நகர்மன்றத் துணைத் தலைவர் முத்துக்குமரன், கவுன்சிலர்கள் அப்பு சந்திரசேகரன், ஜேம்ஸ் விஜயராகவன், ராஜசேகரன், தலைமையாசிரியர் அருணாச்சலம் மற்றும் பலர் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினர்.
பணி ஓய்வு பெற்ற கம்ப்யூட்டர் ஆசிரியர் முத்துக்குமரன், முதுகலை பொருளாதார ஆசிரியர் ராஜவேலு ஆகியோர் ஏற்புரை வழங்கினர். அப்போது, கம்ப்யூட்டர் ஆசிரியர் முத்துக்குமரன், 1 லட்சம் மதிப்பிலான நாற்காலிகள், கம்ப்யூட்டர் பிரிண்டர் உள்ளிட்ட பொருட்களை, பள்ளிக்கு வழங்கினார்.

