ADDED : மே 06, 2026 11:12 PM
அ நிறம் | அளவு
திட்டக்குடி, மே 7–
கள்ளத்தனமாக மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
திட்டக்குடி சப் இன்ஸ்பெக்டர் பாக்கியாஜ் தலைமையிலான போலீசார் நேற்று பகலில், ரோந்து சென்றனர். அப்போது, வதிஷ்டபுரம் வெள்ளாற்று பாதையில் அனுமதியின்றி, கள்ளத்தனமாக டாஸ்மாக் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்ற அதே பகுதியை சேர்ந்த நரசிம்மன், 47; என்பவரை கைது செய்து, அவரிடமிருந்த 6 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
