/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
நெல்லிக்குப்பம் துாய்மை பணியாளர்கள் குடியிருப்பு வெளி நபர்கள் தங்கியுள்ளதாக குற்றச்சாட்டு

ADDED : ஜூலை 22, 2024 01:16 AM
நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் நகராட்சி துாய்மை பணியாளர்கள் குடியிருப்பில் வசித்த ஓய்வு பெற்றவர்கள் வீடுகளை காலி செய்யாமல் உள்ளனர்.
நெல்லிக்குப்பம் நகராட்சியில் 45 க்கும் மேற்பட்ட நிரந்தர துாய்மை பணியாளர்கள் பணியாற்றி வந்தனர். அவர்கள் குடும்பத்துடன் தங்குவதற்காக நகராட்சி அலுவலகம் அருகிலேயே சில ஆண்டுகளுக்கு முன் பல கோடி மதிப்பில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டன.
அதில் 36 வீடுகள் மட்டும் உள்ளது. அங்கு 36 நிரந்தர துாய்மை பணியாளர்கள் குடும்பத்துடன் வசித்து வந்தனர். இவர்களுக்கு மிக குறைந்த அளவுக்கு வாடகை நிர்ணயம் செய்யப்பட்டு அவர்களது சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட்டது.
பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்கள் பலரும் வீடுகளை காலி செய்யாமல் அங்கேயே வசித்து வருகின்றனர்.அதேபோல் இறந்த துாய்மை பணியாளர்கள் குடும்பத்தினர் மட்டுமல்லாது வேறு ஊருக்கு மாறுதலாகி சென்ற பணியாளர்களும் வசித்து வருகின்றனர்.
பணியில் உள்ளவர்கள் கூட தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வீட்டை வாடகைக்கு விட்டுவிட்டு வெளியே தங்களது சொந்த வீட்டில் வசிக்கின்றனர்.
இதுபோன்றவர்களால் மற்ற பணியாளர்களுக்கு வீடு கிடைக்கவில்லை.வெளியாட்கள் வசிப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்காமல் அதிகாரிகள் அலட்சியமாக உள்ளதாக துாய்மை பணியாளர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
தற்போது துாய்மை பணிகளை ஒப்பந்த பணியாளர்களே செய்கின்றனர்.துாய்மை பணியாளர்கள் குடியிருப்பில் காலி செய்யாதவர்களை காலி செய்து ஒப்பந்த துாய்மை பணியாளர்களுக்கு வழங்குவதன் மூலம் நகராட்சிக்கு வருவாய் கிடைக்க வாய்ப்புள்ளது.