/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
விவசாயிகள் பெயரில் கொள்ளை போகுது வண்டல் மண்
/
விவசாயிகள் பெயரில் கொள்ளை போகுது வண்டல் மண்
ADDED : ஆக 07, 2024 06:19 AM
விருத்தாசலம், சிதம்பரம் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் புவனகிரி, விருத்தாசலம், ஸ்ரீமுஷ்ணம் தாலுகா பகுதிகளில் 20க்கும் மேற்பட்ட ஏரிகள் உள்ளது. விவசாயிகள் பயன்பெறும் வகையில், ஏரிகளில் வண்டல் மண் எடுக்க கடந்த மாதம் மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டது.
அதையடுத்து, ஏரிகளில் விவசாயிகள் மண் எடுத்து, தங்களின் நிலங்களை வளப்படுத்தி வருகின்றனர்.
விவசாயிகள் மண் எடுப்பதற்கு பட்டா, சிட்டா கொடுத்து தாசில்தார்கள் ஒப்புதலுடன் மண் எடுக்க அனுமதி வழங்கப்படுகிறது. ஒரு ஹெக்டருக்கு டிராக்டர் டிப்பர் 10 வண்டிகள் மட்டுமே வண்டல் மண் எடுப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.
ஆனால் விவசாயிகளில் பெயரில் அனுமதி பெற்று அந்த ஊர்களில் உள்ள புரோக்கர்கள் பலர் வீட்டு மனைகளுக்கு மண் அடித்து வருகின்றனர்.
உள்ளூரில் டிராக்டர் டிப்பரில் மண் அடிப்பதற்கு ஒரு நடைக்கு ரூ. 600, வெளியூர்களுக்கு மண் கொண்டு செல்வதற்கு ரூ. 1000 வசூலிக்கப்படுகிறது.
புரோக்கர்கள் மூலம் இப்பகுதிகள் வண்டல் மண் கொள்ளை ஜரூராக நடக்கிறது. பைபாஸ் சாலையில் மண் ஏற்றி செல்லும்போது, வழியில் போலீசார் தடுக்காத வகையில் கவனிக்கப்படுகின்றனர். அதற்கென தனி புரோக்கர்களும் செயல்படுகின்றனர்.
இப்படி நடக்கும் மணல் கொள்ளையால் ஏரியில் 10 அடி ஆழம் வரை மண் எடுத்து, விற்பனை செய்யப்படுகிறது.
மண் விற்கப்படுவதை உள்ளூர் வருவாய்த்துறை அதிகாரிகள், பொதுப்பணித்தறை அதிகாரிகளுக்கு தெரிந்தும் அவரகள கண்டுகொள்வதில்லையாம்.
எனவே, கலெக்டர் நேரடியாக ஆய்வு செய்து, ஏரிகளில் வண்டல் மண் கொள்ளையை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.