/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அம்பேத்கர் பிறந்தநாள் விழா கூட்டம்
/
அம்பேத்கர் பிறந்தநாள் விழா கூட்டம்
ADDED : ஜூலை 01, 2024 06:29 AM

விருத்தாசலம் : விருத்தாசலத்தில், இந்திய குடியரசு கட்சி சார்பில், அம்பேத்கர் 133வது பிறந்தநாள் பெருவிழா கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு, மாநில பொது செயலாளர் மங்காபிள்ளை தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் கணேசன், விழுப்புரம் மாவட்ட தலைவர் குமார், விழுப்புரம் மாவட்ட பொருளாளர் முருகன், ஒன்றிய தலைவர்கள் ஜெயசீலன், சக்திவேல், வேல்முருகன், நகர தலைவர்கள் ராஜேந்திரன், கதிர்காமன், அம்பேத்கர் பவுண்டேஷன் சுரேஷ்குமார், ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர் கதிர்வேல் வரவேற்றார்.
மாநில தலைவர் தமிழரசன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, அம்பேத்கரின் சிறப்பு குறித்து பேசினார். மாநில பொருளாளர் கவுரிசங்கர், முன்னாள் மாநில பொது செயலாளர் தங்கராஜ், மாவட்ட கொள்கை பரப்பு செயலாளர் தன்ராஜ், மாநில அமைப்பு செயலாளர் மோகன், மாவட்ட துணை தலைவர் ரமேஷ்குமார், பாலகிருஷ்ணன், மாரியப்பன், மலையராஜன், கவுதமன், கலாமணி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
இதில், சென்னை, காஞ்சிபுரம், திருச்சி, நெல்லை, திருவண்ணாமலை, கோவை, கன்னியாகுமரி, துாத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
முடிவில், மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் ஆறுமுகம் நன்றி கூறினார்.