ADDED : ஜூலை 17, 2026 10:53 PM
சிதம்பரம்: ஆம்புலன்ஸ் டிரைவரை கத்தியால் வெட்டிய இருவரை போலீசார் கைது செய்தனர்.
சிதம்பரம் அடுத்துள்ள, சிதம்பரம் நாதன்பேட்டை, மேல தெருவை சேர்ந்தவர் கணேசன் மகன் விஜயகுமார். தனியார் ஆம்புலன்ஸ் டிரைவர். இவர், மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகே பணி செய்து வருகின்றார். அதே பகுதியை சேர்ந்த ராமச்சந்திரன் என்பவரும் அங்கு ஆம்புலன்ஸ் டிரைவராக உள்ளார். இந்நிலையில் விஜயகுமாருக்கும், ராமச்சந்திரனுக்கும் முன் விரோதம் உள்ளது.
நேற்று முன்தினம் மீண்டும் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் ராமசந்திரன் மகன் ராகுல் மற்றும் நான்கு பேர் கொண்ட கும்பல், விஜயகுமாரை அடித்து கையில் வைத்திருந்த கத்தியால், தலையில் வெட்டி விட்டு தப்பினர்.
இதில் பலத்த காயம் அடைந்த விஜயகுமார் மாவட்ட மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில், சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில், அண்ணாமலை நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து சிதம்பரநாதன் பேட்டையை சேர்ந்த ராமச்சந்திரன் மகன் ராகுல் 21; சிதம்பரம் அம்பேத்கர் தெருவை சேர்ந்த ராமலிங்கம் மகன் ராகவன், 23; ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும் இருவரை தேடி வருகின்றனர்.
